என்னுரை

கனிந்த வணக்கம்.
[கடந்த பதினாறு ஆண்டுகளாக அச்சில் வெளிவந்து கொண்டிருக்கும் தமிழ் மாருதத்தின் கட்டுரைகளை, உலகத் தமிழர்களின் நுகர்விற்காக, இணயத்தில் இந்த வலைப்பூவின் மூலம் வெளியிடுகிறோம்.]
தொல்காப்பியர், ஓர் ஆண்டை ஆறுபெரும்பிரிவாகப் பிரித்தார். அவை: கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்பன. ஆவணித் திங்களில் தொடங்கி, ஆடித்திங்களுடன் முடிவடையும் பருவங்கள். பருவம் ஒன்றினுக்கு இரு திங்களாக ஆறு பருவத்திற்குப் பன்னிரண்டு திங்கள்! சித்திரை, வைகாசி எனும் இரண்டும், இளவேனிற் பருவம்! சிலப்பதிகாரத்தில் ‘வேனிற்காதை’ என்பதொன்றுண்டு. புலவர்களால் போற்றப்படுவது இவ் ‘வேனில்’. ‘தமிழ்மாருதம்’ தொடங்கியது, இளவேனிலாகிய சித்திரையில்! ஆண்டு பதினைந்து நிறைவுற்றது. இத்திங்களில் பதினாறாம் ஆண்டில் தன் முத்திரைiயைப் பதிக்கின்றது. இதழ், தமிழ் மணம் பரப்பவும்; தமிழினம் முன்னேறவும் தொடர்ந்து பாடுபடும். நாம் என்னதான் கூக்குரலிட்டாலும், மழலையர் பள்ளி முதல் உயர் கல்விவரை தமிழ்வழிக் கல்வி எனும் நிலை வாராதவரை தமிழுக்கு ஆக்கமென்பது கிஞ்சித்துமில்லை!வழக்கம் போல் கட்டுரைகள், கவிதைகள் உள்ளன.
நன்றி!
வாழ்க தமிழ்!
அன்பன்
முனைவர் ச. சாம்பசிவனார்
0 Comments:
Post a Comment
<< Home