Name:
Location: Chennai, Tamilnadu, India

Arulselvan is a staff of the Electronic Media Production and Research Centre of Tamil Nadu Open University, Guindy, Chennai, Tamilnadu. He can be reached at arulselvans@yahoo.com Dr S Angayarkanni is a Tamil Lecturer, working in a private college in Chennai

Wednesday, April 19, 2006

செய்திக்குள் செய்தி

ரூ 100 கோடி செலவில்
அமெரிக்காவில் சிவன்கோயில்

‘ஹிந்து டெம்பில் ஆஃப் ஜார்ஜியா’ என்ற அறக்கட்டளை மூலம் அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் நார்கிராஸ் புரூக் ஹாலோ பார்க்வே என்ற இடத்தில் ரூ. 100 கோடி செலவில் சிவன் கோயில் கட்டப்படுகிறது.
இதைக் கலிபோர்னியாவில் வசித்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த சோதிடர் ஸ்ரீ ஸ்ரீ சங்கர் சித்தர் தனது சொந்தச் செலவில் கட்டுகிறார்.
கோயில் அமைய உள்ள ஜார்ஜியா மாகாணம் மிகப் பெரிய வணிகப் பகுதி. இப்பகுதியில் சுமார் 40 ஆயிரம் இந்தியர்கள் வசிக்கின்றனர். கோயில் அமையவுள்ள இந்திய மதிப்பில் ரூ.37 கோடிக்கு வாங்கப்பட்டது. உலகிலேயே முதல் முறையாக 108 உற்சவ மூர்த்தி சிலைகளுடன் பிரதிஷ்டை செய்யப்படும் சிவன் கோயில் இதுதான்.
கோயிலுக்குத் தேவையான 108 ஐம்பொன் சிலைகளைக் கும்பகோணம் அருகே சுவாமிமலையிலுள்ள ஜானகி ஆர்ட் அண்டு கிராப்டின் தலைமை ஸ்தபதி எம். ராமகிருஷ்ணன் செய்து வருகிறார். இதே போல், கற்களால் ஆன மூல விக்ரகங்களை, கோவை மாவட்டம் அவிநாசி திருமுருகன் பூண்டியில் உள்ள நவபாரதி சிற்பக் கலைக் கூடத்தின் தலைமை ஸ்தபதி சம்பந்தம் வடிவமைத்தார்.
கோயிலைச் சுற்றி 4 ஆயிரம் அடியில் வேலி அமைக்கப்படும். இதற்கான பணியில் கிரில் உற்பத்தி சங்கத் தலைவரான கோவிந்தராசன் ஈடுபட்டு வருகிறார். இதுவரை 1,600 அடிக்கான வேலி தயாரிக்கப்பட்டுள்ளது.

அய்யம்பொழில் ஈசுவரமுடைய நாயனார் கோயில் :
ரூ 50 லட்சம் செலவில் திருப்பணி செய்ய முடிவு

தொன்மையான சிவத் தலங்களில் ஒன்றான அய்யம்பொழில் ஈசுவரமுடைய நாயனார் திருக்கோயிலில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகத்தால் விரைவில் திருப்பணி மேற்கொள்ளப் படவிருக்கிறது.
சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்திருக்கோயில் மதுரை அருகே உள்ள ஒத்தக்கடை - திருவாதவூர் சாலையில் ஆமூர் கிராமத்தில் உள்ளது.
சிதிலமடைந்த நிலையில் முள்புதர்கள் நிறைந்திருந்த இக்கோயில்கருவறை, அர்த்தமண்டபம் ஆகிய பகுதிகளைக் கொண்டு விளங்குகிறது. கருவறையின் மேல்புறம் உள்ள விமானப் பகுதி முற்றிலும் சிதைந்துள்ளது. கருவறையிலிருந்து அபிஷேக நீர் வெளியேறும் பகுதி வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
பாண்டியர் காலத்தில் செதுக்கிய பைரவர் சிற்பமும், தேவியின் சிற்பமும் சிதிலமடைந்துள்ளன. அழகிய நந்தி மகாமண்டபத்தின் வெளிப்புறம் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் இக்கோயில் மதில் சூழ்ந்த பெருங்கோயிலாக இருந்தமைக்குச் சான்றாக இதனைச் சுற்றி ஏராளமான கற்கள் சிதைந்து கிடக்கின்றன. கோயில் அருகே தாமரைப் பூக்கள் நிறைந்த குளமும் உள்ளது. வேண்டுதல்கள் நிறைவேறியுள்ளதாகப் பலர் அடிக்கடி இக்கோயிலுக்கு வந்து வழிபாடு செய்து வருகின்றனர்.
கி.பி. 12-ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் குலசேகர பாண்டியன், மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆகியோர் ஆதரவுடன் வணிகக் குழுவினரால் இக்கோயில் கட்டப்பட்டது எனக் கூறப்படுகிறது.
பல்லவ சிற்றரசர்களில் சிலர் அரசுரிமை இழந்த பின் பிற்காலப் பாண்டியர் ஆட்சியில் அதிகாரிகளாகப் பணியாற்றியவர்கள் ‘காடுவெட்டி’ என அழைக்கப்பட்டனர். அப்படிப்பட்ட ஒருவரால் இக்கோயில் நிலைவாயில் உருவாக்கப்பட்டுள்ளது. சிதிலமடைந்த நிலையில் உள்ள இக்கோயிலில் ரூ. 50 லட்சம் செலவில் விரைவில் திருப்பணி மேற்கொள்ளப்படவிருக்கிறது.

1,800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட
முருகன் கோயில் கண்டுபிடிப்பு

மாமல்லபுரம் அருகே இந்தியத் தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் சுமார் 1,800 ஆண்டுகளுக்கு முன்பு (சங்க காலத்தில்) கட்டப்பட்ட பிரம்மாண்டமான முருகன் கோயில் கண்டறியப்பட்டுள்ளது. மாமல்லபுரம் அடுத்த சாலுவங் குப்பத்தில் புலிக்குகை அருகே கடற்கரையை ஒட்டிய பாறையில் தமிழ்க் கல்வெட்டுகள் இருந்தது கண்டறியப்பட்டது.
இதில் ஒரு கல்வெட்டு, சுப்பிரமணியசுவாமி கோயிலில் திருவிளக்கு எரிய தங்கத்தைத் தானமாக வழங்கி ராஷ்டிரகூட மன்னன் 3-ம் கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது. இதர கல்வெட்டுகள் குலோத்துங்க சோழன், பராந்தகச் சோழன் காலத்தைச் சேர்ந்தவை. இக் கல்வெட்டுகளை ஆய்வு செய்ததில், இப் பகுதியில் முருகன் கோயில் இருந்திருக்கக் கூடும் என்பது தெரியவந்தது.
இதில் கல்வெட்டுகள் உள்ள பாறையை ஒட்டி செங்கற்களால் ஆன கருவறை கட்டப்பட்டுள்ளது தெரியவந்தது. செம்பாறைக் கற்களால் 4 அடுக்கு அஸ்திவாரம் அமைத்து அகலமான பெரிய செங்கற்களால் மண் வைத்து இக் கருவறை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே முதன்முறையாக செங்கற்களால் அமைக்கப்பட்ட கோயில் கருவறை கட்டப்பட்டுள்ளது இது மட்டுமே ஆகும்.
மரம், சுண்ணாம்பு, உலோகம், கற்களை விட செங்கற்களால் கருவறை கட்டப்படுவது மிகவும் புனிதமானது என்ற கருத்து பழங்காலத்தில் இருந்தது இதற்குக் காரணமாக இருக்கக்கூடும். இதைத் தொடர்ந்து ஒரு தூணிலும் கல்வெட்டு உள்ளது கண்டறியப்பட்டது. சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குத் தானம் அளித்த விவரங்களை இக்கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
கி.பி. 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டில் ‘திருசூலம்’ பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுகளில் சாலுவங்குப்பம் கிராமம் ‘திருவிழிச்சல்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்லவர் கால வரலாற்றில், ஆமூர் கோட்டத்துக்கு உட்பட்டதாக இக்கிராமம் இருந்துள்ளது. தொடர்ந்து பல்லவ மன்னர்களான நந்திவர்மன், தந்திவர்மன் ஆகியோரது கால கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன.
கோயிலின் பிரதான வாயில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த வாயிலுக்கு முன்புள்ள மண்டபத்தில் பல்லவ மன்னன் கம்பவர்மன் காலத்து (கி.பி. 870-ம் ஆண்டு) புதிய கல்வெட்டு அண்மையில் கண்டறியப்பட்டது. இதன்பின் தொடர்ந்த அகழாய்வில் இராச ராச சோழன் காலத்து செப்புநாணயம் கிடைத்தது. கோயிலுக்கு உள்ளே வேல் கோட்டம் அமைந்துள்ளது. இதில் கல்லால் செதுக்கப்பட்ட பிரமாண்ட வேல் நிறுவப்பட்டுள்ளது.

பழ - நெடுமாறன் நூல்கள் வெளியீடு

மாவீரன் திரு பழ. நெடுமாறன், சிறையிலிருந்த போது எழுதிய, ‘உருவாகாத இந்தியத் தேசியமும் உருவான இந்து பாசிசமும், பழந்தமிழ் பரவிய நாடுகள்’ முதலான 6 நூல்கள், பூங்குழலி எழுதிய ‘தொடரும் தவிப்பு’ நூல் என 7 நூல்களின் வெளியீட்டு விழா, மதுரையில் 1-4-05இல் நிகழ்ந்தது. நூல்களைக் குளத்தூர் மணி முதலானோர் வெளியிட்டு, உரையாற்றினர். நிகழ்ச்சிக்கு இசைமேதை திரு. பி.டி.ஆர். கமலத் தியாகராசன் தலைமை வகித்தார். திரு. பழ. நெடுமாறன், ஏற்புரை நிகழ்த்தினார்!
- நன்றி : தினமணி 29, 30-3-06, 2-4-06.

0 Comments:

Post a Comment

<< Home