Name:
Location: Chennai, Tamilnadu, India

Arulselvan is a staff of the Electronic Media Production and Research Centre of Tamil Nadu Open University, Guindy, Chennai, Tamilnadu. He can be reached at arulselvans@yahoo.com Dr S Angayarkanni is a Tamil Lecturer, working in a private college in Chennai

Wednesday, April 19, 2006

இன்றமிழ்ப் பணியே, என்றலைக் கடனே

[முனைவர் ச சாம்பசிவனார்]

“நாவலர் பாரதியாருக்கு மதுரைநகரில் சிலை வைக்க வேண்டும்” என்ற எமது தீர்மானம், மதுரையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டின் போது நிறைவேற்றப் பட்டது. மதுரையிலிருந்து நாவலர் வாழ்ந்த பசுமலைக்குச் செல்லும் சாலையில், பழங்காநத்தம் அருகே மூன்று சாலைகள் கூடுமிடத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதனைத் திறந்து வைத்த பெருமைக்குரியவர் மாண்புமிகு கா. காளிமுத்து ஆவார். “நூற்றாண்டுவிழாவைத் தமிழக அரசு கொண்டாடவேண்டும்” என்ற தீர்மானத்தையும் தமிழக அரசு ஏற்றுக்கொண்டு, சென்னை இராசாசி மண்டபத்தில் விழாவைக் கொண்டாடியது. மதுரை மேயர் திரு. எஸ். முத்து தலைமைதாங்க, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், முனைவர் ஒளவை து. நடராசனார் ஆகியோருடன் யானும் கலந்து கொண்டு உரையாற்றினேன். நாளிதழ்களில் தமிழக அரசே விளம்பரமும் செய்திருந்தது.
இவ்வகையில் எனது பெருமுயற்சியால், சேதுபதி மேனிலைப் பள்ளி அரங்கில் நடந்த நூல் வெளியீட்டு விழாவின் போது போடப்பட்ட தீர்மானங்களில் மேற்குறித்த இரண்டு நிகழ்வுகள் நிறைவேற்றப்பட்டன என்பது மகிழ்ச்சிக்குரியது. நாவலர் பாரதியார் நூல்களை மீண்டும் அச்சுக்குக் கொண்டு வந்தும் போதிய பலன் கிட்டவில்லை. பொதுநூலக இயக்ககமும் அப்போது வாங்கவில்லை; ஏனையோரும் விரும்பினார்களில்லை. இதனால் நாவலர் புத்தக நிலையத்திற்கு நட்டந்தான்!
இதற்குகிடையில் பசுமலையில் இருந்த திருமதி. வசுமதி அம்மாள் பாரதி, தம் இருப்பிடத்தைச் சென்னைக்கு மாற்றி விட்டார். டாக்டர் (திருமதி) லலிதா காமேசுவரன் இல்லத்தில் குடியேறி விட்டார். அறப்பணிக்குழுத் தலைவர் டாக்டர் சோ. இராசாராம் பாரதியாரும் இயற்கை எய்திவிட்டார். திரு சோ. இலக்குமிரதன் பாரதியார், அறப்பணிக்குழுத் தலைவர் பொறுப்பேற்றார். அவர் சென்னையி லிருந்ததாலும் அவரைக் கண்டு அறப்பணிக்குழு பற்றிப் பேசவோ, செயலாற்றவோ இயலாமையாலும் இக்குழுவின் செயல்பாடுகளில் சிறிது தேக்கநிலை ஏற்பட்டது. எனவே ‘நாவலர் பாரதியார் இலக்கிய மன்றம்’ என்றதோர் அமைப்பை உருவாக்கினேன். பண்டித மீ. கந்தசாமிப் புலவர் இதன் தலைவர்; யான் - செயலர்.
இம்மன்றத்தின் சார்பில், மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் பல இலக்கியக் கூட்டங்கள் நடத்தினேன். யான், தொடங்கிய அருட்பா அச்சகம் மதுரை நகரில் மேலப்பொன்னகரத்தில் செயல்பட்டது. என் இளையமகன் சா. திருமாவளவன் அதனைக் கவனித்து வந்தான். யான் குடியிருந்த வீடோ, சிறிது தொலைவில் மேலமாசிவீதியருகே இருந்தது!
ஓர் இலக்கியக் கூட்டம்; முனைவர் வ.சுப. மாணிக்கனார் பேசுவதாக அழைப்பு, அச்சகத்தில் அடிக்கப்பட்டது. மெய்ப்புப்படி (புரூப்) திருத்தும் பொருட்டு அச்சகத்தில் (26-7-1986) இருந்தேன். என் துணைவி மனோன்மணிக்கு உடல் நலமில்லை எனத் தொலைபேசிச் செய்தி; விரைந்து வீட்டுக்கு வந்தேன்; நெஞ்சுவலியால் துடியாய்த் துடித்துக் கொண்டிருந்தாள்; மாடி வீடு; அவளைத் தூக்கிக் கீழே இறக்கிக் காரில் படுக்கவைத்து, மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். ‘கடுமையான இருதய வலி’ (ஆயளளiஎந யவவயஉம) என்றனர். பிழைக்க வாய்ப்புண்டு என்றனர்; காத்துக்கிடந்தோம். சிலமணி நேரத்தில், யாம் கண்ணிற் காணாதபோது, மருத்துவமனைத் தனியறையில், உயிர் நீத்தாள்!

1 Comments:

Blogger ENNAR said...

என்னசார் பன்றது நமக்கு கொடுத்துவைத்தது அவ்வளவுதான் இறைவன் நல்லவர்களைத்தான் சோதிப்பானாம்

7:31 AM  

Post a Comment

<< Home