Name:
Location: Chennai, Tamilnadu, India

Arulselvan is a staff of the Electronic Media Production and Research Centre of Tamil Nadu Open University, Guindy, Chennai, Tamilnadu. He can be reached at arulselvans@yahoo.com Dr S Angayarkanni is a Tamil Lecturer, working in a private college in Chennai

Wednesday, April 19, 2006

அசுணம் - மாசுணம் முரண்பாடு

அ. பாண்டியன், எம்.ஏ., எம்.ஃபில்.,

சென்ற இதழில் (மார்ச்சு) 2006 அசுணமா என்ற கட்டுரையைப் படித்தேன், அதில் அசுணமும் மாசுணமும் பெரும் பாம்பு என்ற முடிவிற்கு வரலாம் எனக் கட்டுரையாளர் கூறியிருப்பதில் முரண்பாடு உள்ளதாகத் தெரிகிறது.
1. அசுணம் என்பது இசையறியும் ஒருவகைப்புள் எனவும், ‘மாசுணம்’ என்பது பெரும்பாம்பு எனக் கழகத்தமிழ் அகராதியும், கதிரைவேற்பிள்ளை தமிழ் அகராதியும் குறிப்பிடும்.
2. பாம்பின் பெயர் : அரவு, கட்செவி, சர்ப்பம், நாகம், மாசுணம், எனப்பல பெயர்களும்.
அசுணமாவின் பெயர் : கேகயம் என்றோதும் எனப்பறவை பெயரிலும் சூடாமணி நிகண்டு கூறுகிறது.
3. அசுணம், கேகயம், பறைப்பகை, இசைப்பிரியி எனவும் மாசுணம் என்பது பாம்பெனவும் நாமதீப நிகண்டு கூறுகிறது.
4. கேகயம் என்பது பறவையினம் என்றும், அது மயிலைக் குறிக்கும் சொல் என்றும் அகராதிகள் இயம்புகின்றன. ஆக ‘அசுணம்’ என்பது பறவையினம் என்பது புலனாகிறது.
“சிவபெருமானுக்கு மாசுணக்கங்கணன், மாசுணக்கச்சையன் எனும் பெயர்கள் உண்டு. கையிலும் இடுப்பிலும் பாம்பை அணியாகக் கொண்டுள்ளதால் இப்பெயர்கள் வழங்குகின்றன.
“உலவு நீள சுணமா” உலவு - உலவுகின்ற; நீள --- நீளமான, நீண்ட; சுணம் ---அழகிய தேமல்; மா --- விலங்கு, மானினம் எனப் பொருள் கொண்டால் ‘சுணமா’ என்பது பாம்பைக் குறிப்பதாகாதன்றோ?
“முரசொலி கேட்ட அசுணமென்
புள்ளின் மூச்சவிந்து” இதில் அசுணம் என்பது பறவையைக் குறிக்குமெனில், அது கற்பனையாகாது. புராணத்தில் சுட்டப்பட்டிருப்பதாலேயே பறவைகளும் விலங்குகளும் கற்பனையாக மாட்டா.
“இன்னளிக்குரற் கேட்ட அசுணமா
அன்னளாய் மகிழ்வெய்து” (சீவக சிந்தாமணி 1402)
“இனிய இசைகேட்ட அசுணமா போல மகிழ்வெய்தினாள்” என்பதில் அசுணம் என்பதொரு இசையறியும் விலங்கு அல்லது பறவை எனக்கூறுவர் என்று உரையாசிரியர் கூறியிருப்பதால், அசுணம் என்பது விலங்கு என்ற முடிவிற்கும் வரஇயலாது.
“கரரொடு மக்கள் வீழ்ந்தார் சோர்ந்தன புள்ளும் மாவும்
உருகின மரமும் கல்லும் ஒர்த்து எழீஇப் பாடுகின்றான்” (சீவகசிந்தாமணி 723)
இதில் யாழைச் சீவகன் மீட்டக் கேட்ட பறவைகளும் விலங்குகளும் சோர்வுற்றதாக அறிகிறோம். இசையறிவுள்ள பறவைகளும், விலங்குகளும் உண்டு என்பது புலனாகிறது.
எனவே ‘அசுணமா’ என்பது இறையறிப்பறவையெனவும், ‘மாசுணம்’ என்பது இசையறி விலங்கு எனவும் கொள்வதே பொருத்தமாக இருக்கும் என்ற முடிவுக்கு வரலாம்.
____________

0 Comments:

Post a Comment

<< Home